சிவப்பாக மாறிய ஸ்பெயினின் நகரம்- ஒருவர் மீது ஒருவர் தக்காளியால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா
- திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் ($13) தொடங்குகிறது.
- சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் "டொமடினா" என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது. அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் திருவிழாதான் அது. இதற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திருவிழாவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 15,000 பேர் தக்காளியுடன் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
தக்காளி திருவிழாவால் தெருக்கள், வீடுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் என அனைவரும் தக்காளி கூழில் நினைந்தனர்.
இந்த திருவிழாவிற்கான டிக்கெட்டுகள் 12 யூரோக்களில் ($13) தொடங்குகிறது. காசு கொடுத்து தக்காளியை வீண் செய்யும் இந்த வினோத திருவிழாவைக் கண்டு இந்திய மக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
காரணம், இந்தியாவில் தக்காளியின் விலை அதிகரித்து காணும் நிலையில், ஸ்பெயினில் தக்காளியை வீண் அடிப்பதற்காகவே ஒரு வினோத திருவிழா நடத்துவது நமக்கு ஆச்சரியமான விஷயம்தான்.