உலகம்

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் முந்தும் ரிஷி சுனக்: கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2022-07-29 03:40 GMT   |   Update On 2022-07-29 03:40 GMT
  • ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.
  • டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

லண்டன் :

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித்தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்து இருக்கிறது.

இதில் முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகியோர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டு உள்ளது.

இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்த வாக்காளர்களிடம் ரிஷி சுனக் ஆதரவு பெற்று உள்ளார்.

மொத்தம் 4,946 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ரிஷி சுனக் ஒட்டுமொத்த நிகர சாதகமான மைனஸ் 30 மதிப்பெண்ணை கொண்டுள்ளார். அதேநேரம் ட்ரஸ்ஸின் நிகர சாதகத்தன்மை மைனஸ் 32 ஆகும்.

இதன் மூலம் டிரஸ்சை விட ரிஷி சுனக் சற்றே முன்னிலை பெற்றிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News