உலகம்

ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் தேர்தல் - 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரிஷி சுனக்

Published On 2022-07-18 19:44 GMT   |   Update On 2022-07-18 19:44 GMT
  • பிரதமர் பதவிக்கான மூன்றாம் சுற்று தேர்தல் இன்று நடைபெற்றது.
  • இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

லண்டன்:

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் மந்திரிகள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உள்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.

இதற்கிடையே, இரு சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவில் கன்சா்வேட்டிவ் கட்சியின் 358 எம்.பி.க்கள் வாக்களித்தனா். இதில் இங்கிலாந்து முன்னாள் நிதி மந்திரியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், மூன்றாம் சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ரிஷி சுனக் உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். இதில் ரிஷி சுனக் 115 வாக்குகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வர்த்தக மந்திரி பென்னி மார்டன்ட் 88 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். கெமி படேனோக் 58 வாக்குகள் பெற்றுள்ளார்.

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News