டேக் ஆஃப் ஆன போது விபத்தில் சிக்கிய ரஷிய ராணுவ விமானம் - 15 பேரின் நிலை என்ன?
- என்ஜின்களில் ஒன்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
- டேக் ஆஃப் ஆன சமயத்தில் விபத்தில் சிக்கியது.
15 பேருடன் புறப்பட்ட ரஷிய ராணுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் டேக் ஆஃப் ஆன போது விபத்தில் சிக்கியது. இல்யூஷின் 76 என்ற விமானம் மாஸ்கோவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ என்ற பகுதியில் சென்ற போது, என்ஜினில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது.
"IL-76 ராணுவ போக்குவரத்து விமானம் இவானோவோ பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் விமான பணியாளர்கள் எட்டு பேரும், ஏழு பயணிகளும் இருந்தனர்," என்று ரஷிய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக விமானம் விபத்தில் சிக்கியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான சம்பவ இடத்திற்கு ராணுவ குழு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. விபத்தில் சிக்கிய பயணிகள் மற்றும் பணியாளர்களின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லை.