உலகம்
ரஷிய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் பலி
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 மாதத்தைக் கடந்துள்ளது.
- இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கீவ்:
மத்திய உக்ரேனிய நகரமான வின்னிட்சியாவின் மையப்பகுதியில் இன்று 3 ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர் என மாநில அவசர சேவை தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் அலுவலகக் கட்டிடங்கள் மீது தாக்கி அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சேதப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பெரிய தீ விபத்து கார் நிறுத்துமிடத்திற்கு பரவி வாகனங்களை எரித்தது என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றம் சாட்டினார்.