உலகம்

எஞ்சின் கோளாறு- சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து

Published On 2024-02-02 10:10 GMT   |   Update On 2024-02-02 11:10 GMT
  • தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
  • மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என தகவல்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கும் மொபைல் ஹோம் பார்க்கில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒற்றை எஞ்சின் கொண்ட பீச்கிராஃப்ட் பொனான்சா வி35 விமானத்தின் பைலட், விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரம் முன்பு எஞ்ஜின் செயலிழந்தது என்று அறிவித்ததாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.

வீட்டின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீக்கு இரையானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.

இதுகுறித்து கிளியர்வாட்டர் தீயணைப்புத் தலைவர் ஸ்காட் எஹ்லர்ஸ்," விபத்துக்குள்ளான விமானம் ஒரே கட்டமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டது," என்றார்.

இந்த விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. என்றாலும் விமானம் விழுந்த வீட்டிலும், விபத்தில் சிக்கிய விமானத்திலும் பலர் இருந்ததாக தெரியவந்துள்ளது.

மத்திய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News