உலகம்

தந்தை சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி கேட்கும் ஷேக் ஹசீனா

Published On 2024-08-13 16:18 GMT   |   Update On 2024-08-13 16:18 GMT
  • போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.
  • முஜிபுர் ரஹ்மான் சிலையில் சிறுநீர் கழித்து அவமானம் செய்தனர்.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார்.

ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் செல்வாரா? இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பாரா? இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்குமா? என்பதற்கு விடை கிடைக்காமல் உள்ளது.

இதற்கிடையே ஷேக் ஹசீனா கடந்த வாரம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நடந்த வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் வன்முறை முடிவுக்க வந்த பாடில்லை.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக வங்கதேச வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா வங்காளதேச வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். வங்கதேசத்தின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News