உலகம்

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மறைவு

Published On 2023-06-12 09:59 GMT   |   Update On 2023-06-12 09:59 GMT
  • ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், அதன் தொடர்புடைய நுரையீரல் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றார்.
  • முதன்முதலாக 1994இல் பிரதமராக பதவியேற்ற பிறகு 2011ம் வருடம் வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார்.

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். பாலியல் வழக்குகளிலும், ஊழல் குற்றச்சாட்டுகளிலுமிருந்து மீண்டு வந்த அவர் மிலன் நகரின் சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதம் நாட்பட்ட ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், அதன் தொடர்புடைய நுரையீரல் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

பெர்லுஸ்கோனி, முதன்முதலாக 1994-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். 2011ம் வருடம் வரை நான்கு அரசாங்கங்களை பிரதமராக வழிநடத்தினார்.

செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு, இத்தாலியின் மேலவையான செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் கூட்டணியில் இணைந்த மைய-வலது ஃபோர்ஜா இத்தாலிய கட்சியின் தலைவராக பெர்லுஸ்கோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags:    

Similar News