உலகம்

கோத்தபய ராஜபக்சே

தோல்வி அடைந்த அதிபராக பதவி விலக மாட்டேன்- கோத்தபய ராஜபக்சே அதிரடி

Published On 2022-06-07 04:30 GMT   |   Update On 2022-06-07 04:30 GMT
  • தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
  • ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளதாகவும், எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு:

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகிவிட்டு, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொருளாதார முன்னேற்றத்தில் எந்த பயனும் இல்லை.

இதையடுத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்றும், இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என மக்கள் போராட்டத்தை திவீரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தோல்வி அடைந்த அதிபராக தன்னால் பதவியை விட்டு வெளியேற முடியாது என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய மக்கள் தனக்கு ஆணை வழங்கியுள்ளனர். எஞ்சியுள்ள 2 ஆண்டு காலத்தையும் ஆட்சி செய்வேன். குறைந்தது ஒரு ஆண்டிற்கு முன்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தால் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இருப்பினும் நெருக்கடியை சமாளிக்க இந்தியா, சீனா நாடுகளிடம் உதவியை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News