உலகம்

தென் ஆப்பிரிக்க அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு

Published On 2024-06-15 13:04 GMT   |   Update On 2024-06-15 13:04 GMT
  • 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
  • கடந்த 30 ஆண்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வென்றது.

கேப் டவுன்:

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.

இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News