உலகம் (World)

தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: இலங்கை அதிபரின் கட்சி பரிந்துரை

Published On 2024-05-28 15:31 GMT   |   Update On 2024-05-28 15:31 GMT
  • செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு.
  • பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் பதவி நீட்டிப்பு உதவியாக இருக்கும் என கருகிறது.

இலங்கை பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்துள்ளது. இன்னும் அதில் இருந்து மீண்டு வரவில்லை. இலங்கையின் அதிபராக விக்ரமசிங்கே இருந்து வருகிறார். பொருளாதார மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வருடம் செப்டம்பர் 17-ந்தேதியில் இருந்து அக்டோபர் 17-ந்தேதிக்குள் இலங்கை நாட்டின் அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிபராக இருக்கும் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும் அதன் அலுவலக செயல்பாட்டையும் இரண்டு வருத்திற்கு நீட்டிக்க வேண்டும். இது மிகவும் தேவையான பொருளாதார மறுசீரமைப்பை தொடர உதவியாக இருக்கும் என பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகள் இது அரசியலமைப்புக்கு எதிரானது என உடனடியாக விமர்சனம் செய்துள்ளன.

தேசம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. அதை சமாளித்து வெற்றி பெற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கொடுத்தன.

சர்வதேச நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளோம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம், இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். நிர்வாக சீர்திருத்தங்கள் ஆட்சியை நெறிப்படுத்தியுள்ளன, மேலும் கல்வி முறை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பளிதா ரங்கே பண்டாரா தெரிவித்துள்ளார்.

அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது பொது வாக்கெடுப்பு வழிவகுக்கும் என அக்கட்சி நம்புகிறது.

எதற்காக இரண்டு வருடம் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான முழு விவரத்தையும் பண்டாரா குறிப்பிட்டுள்ளார். பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை அரசு ஐஎம்எஃப், உலக வங்கி, நன்கொடையாளர்களடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவற்றை வெற்றிகரமாக செய்த முடிக்க அதிபர் பதவியை இரண்டு வருடங்கள் நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News