உலகம்

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

Published On 2023-09-24 06:03 GMT   |   Update On 2023-09-24 06:03 GMT
  • தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
  • தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பெலிட்வி:

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த லாரியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் லாரியில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க செய்து இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர்,

இந்த தற்கொலை படை தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் 5 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News