நாங்கள் கடன் கொடுத்ததால் இலங்கை பொருளாதாரம் சீரழியவில்லை- சீனா மறுப்பு
- சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது.
- சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது.
பெய்ஜிங்:
அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு கையேந்தியது. இதையடுத்து பல்வேறு நாடுகள் இலங்கைக்கு நேசக்கரங்கள் நீட்டியது.
சீனாவும் கடன் உதவி செய்தது. இந்தநிலையில் அதிக வட்டிக்கு சீனா கடன் கொடுத்ததால் இலங்கை பொருளாதாரம் சீரழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லீஜன் கூறியதாவது:-
சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது. வெளிநாட்டு கடன்களுக்கான பல பிரிவுகள் உள்ளன. சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது. இலங்கையின் உள் கட்டமைப்பு அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த சீனா தனது பங்களிப்பை செய்து வருகிறது. நாங்கள் கடன் கொடுத்ததால் இலங்கையின் பொருளாதாரம் சீரழியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.