உலகம்

சிரியாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 38 பேர் பலி

Published On 2024-03-30 05:30 GMT   |   Update On 2024-03-30 05:30 GMT
  • காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
  • இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் குண்டுகள் மற்றும் 25 ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

டமாஸ்கஸ்:

இஸ்ரேல்-காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையே போரில் லெபானாவில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சிரியாவில் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் வான்விழத் தாக்குதல் நடத்தியது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 5 பேர் உள்பட 38 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறும் போது, அலெப்போ மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.

சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஈரானில் புரட்சிகர காவல்படை மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானும் அதன் ஆதரவு இயக்கங்களும் சிரியா முழுவதும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.

இதற்கிடையே இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் குண்டுகள் மற்றும் 25 ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் ஆயுத உதவிகளையும் வழங்குகிறது.

Tags:    

Similar News