உலகம்

எஸ்கலேட்டருக்கு தடை விதித்த நகரம்

Published On 2023-10-18 05:13 GMT   |   Update On 2023-10-18 05:13 GMT
  • முன்பெல்லாம் படிக்கட்டுகளில் ஏறிய மக்கள் தற்போது சொகுசாக எஸ்கலேட்டர்களில் சென்று வருகின்றனர்.
  • எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், விபத்துக்கள் நிகழாமல் தடுப்பதுமே சட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துவிட்ட இன்றைய காலத்தில் ரெயில் நிலையங்கள் முதல் வணிக வளாகங்கள் மற்றும் பெரிய ஜவுளி கடைகள் என எங்கு பார்த்தாலும் எஸ்கலேட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. முன்பெல்லாம் படிக்கட்டுகளில் ஏறிய மக்கள் தற்போது சொகுசாக எஸ்கலேட்டர்களில் சென்று வருகின்றனர்.

ஆனால் எஸ்கலேட்டர்கள் பயன்படுத்த ஒரு நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்களை கண்ட ஜப்பான் நாட்டில் உள்ள நகோயா என்ற நகரம் தான் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் நகோயா நகரில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

எஸ்கலேட்டர்களில் இருந்து மக்கள் தவறி விழுவதால் அவர்களை பாதுகாக்கவும், இதுபோன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுப்பதுமே இந்த சட்டத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஜப்பான் நாட்டில் பயணிகள் எஸ்கலேட்டரின் இடது பக்கத்தில் நிற்க வேண்டும். மற்றவர்கள் விரைவாக ஏறவோ அல்லது இறங்கவோ வலது பக்கத்தை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

Tags:    

Similar News