மெக்சிகோவில் தாய்- மகள் உள்பட 3 பேரை சுட்டுக்கொன்ற வாலிபர்
- போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
குவாத்தமாலா:
வடமேற்கு நியூ மெக்சி கோவில் சம்பவத்தன்று 18 வயது மர்ம வாலிபர் ஒருவர் தேவாலயம் முன்பு நின்று கொண்டு கண்ணில் தென் பட்டவர்களை எல்லாம் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.
இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். அந்த வழியாக சென்று கொண்டு இருந்த 97 வயதுடைய ஸ்கோபீல்ட் மற்றும் அவரது 73 வயது மகள் மெலடி ஆகியோர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஷெர்லி என்ற 79 வயது பெண்ணும் பலியானார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற ஒருவரும் குண்டுகாயம் அடைந்தார்.
சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம வாலிபர் எங்கும் தப்பி ஓடாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். போலீசாரை பார்த்தும் அருகில் வந்து என்னை சுட்டுக்கொல்லுங்கள் என உரத்த குரல் எழுப்பினான். அவனை சரண் அடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவன் வெறித் தனத்துடன் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தான்.
பின்னர் அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்கோபீல்ட் என்ற பெண் பல ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிவர். அவரது மகள் மெலடி பாலர் பள்ளி நடத்தி வந்தார். தாய்- மகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.