உலகம்

புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் வடிவிலான பனிப்பாறைகள்

Published On 2023-05-29 08:45 GMT   |   Update On 2023-05-29 10:40 GMT
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.
  • புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வானில் விண்கலன்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் வியப்பூட்டும் அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

தற்போது நியூ ஹரிசான்ஸ் விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதில் சூரியனை சுற்றி வரும் 9-வது பெரிய கோளான புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்று வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மலைகள், பாறைகள், பள்ளத்தாக்கு, பள்ளங்கள் மற்றும் சமவெளி பகுதிகள் அமைந்து இருப்பது போன்று உள்ளது. புளூட்டோவின் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனை பார்த்த இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இந்த காட்சியை வியந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் இது அற்புதமான புகைப்படம். இதை படம் எடுத்த நியூ ஹரிசான்ஸ் விண்கலத்துக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News