உலகம்
இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
- இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்.
- இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்.
ஹமாஸ் படையால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் குடும்பத்தினர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-இல் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிணை கைதிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகளுடன் வந்து அவர்களை மீட்கக் கோரி கண்டனக் குரல் எழுப்பினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதவிர, இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரட்டை குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறலாம் என்று முதலில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.