உலகம்

உக்ரைன் கிவ் நகரில் ரஷிய படை மீண்டும் தாக்குதல்

Published On 2022-10-13 08:41 GMT   |   Update On 2022-10-13 08:41 GMT
  • இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
  • கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது.

உக்ரைன் தலைநகர் கிவ்வில் கடந்த 10-ந் தேதி ரஷிய படைகள் ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் பலியானார்கள். ரஷியாவின் வசமுள்ள கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் கிவ் நகரில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டது. உடனே மக்கள் பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் நடந்த இடங்களுக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

இதுகுறித்து கிவ் பிராந்திய கவர்னர் ஒலெக்சி குலேபா கூறும்போது, "தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடந்தது" என்றார். தாக்குதல் நடத்திய டிரோன்கள் ஈரான் தயாரித்த காமிகேஸ் டிரோன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News