சிரியா மீது துருக்கி வான்வெளி தாக்குதல்- 12 கிளர்ச்சியாளர்கள் பலி
- குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதுகிறது.
- சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறி வைத்து துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள்.
அங்காரா:
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு அவ்வப்போது துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என கருதுகிறது. துருக்கிக்கு இவர்கள் பெரும் தலைவலியாக இருந்து வருகிறார்கள். இதனால் இவர்களை ஒடுக்க துருக்கி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு சிரியாவில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறி வைத்து துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
கிளர்ச்சியாளர்கள் வடக்கு சிரியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இதை முறியடிக்கும் வகையில் அவர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் துருக்கி பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.