டிரம்ப் ஆதரவாளருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை- அமெரிக்க கோர்ட் தீர்ப்பு
- கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார்.
- வழக்கு சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது.
சான் பிரான்சிஸ்கோ:
அமெரிக்கா பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி. கடந்த 2022-ம் ஆண்டு இவர் பதவியில் இருந்தபோது வாலிபர் ஒருவர் நான்சி பெலோசியின் வீடு புகுந்து அவரை கொலை செய்ய முயற்சித்தார். இதனை தடுக்க வந்த அவருடைய கணவர் பால் பெலோசியை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பால் பெலோசி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் டேவிட் டீபாபே என்பதும், டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்துவந்த அவர், ஆளுங்கட்சியினர் செயல்பாடுகளால் வெகுண்டெழுந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பான வழக்கு சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் முன்னாள் சபாநாயகரின் வீடு புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட டேவிட் டீபாபேவுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தீர்ப்பு கூறியது.