உலகம்
காய்ச்சலுக்கு மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி- இந்திய தயாரிப்பு நிறுவனம் மீது குற்றச்சாட்டு
- உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.
- குழந்தைகள் உயிரிழப்புக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் தூதரகம், இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது புகார் கூறியுள்ளது.
அந்த புகாரில் உஸ்பெக்கிஸ்தானில் காய்ச்சல் மற்றும் சளிக்காக குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட டானிக் குடித்த 18 குழந்தைகள் இறந்துள்ளனர்.
இந்த மருந்தை இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று வழங்கி உள்ளது. குழந்தைகளின் சாவுக்கு இந்த மருந்துதான் காரணம். என்று கூறியுள்ளது.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது உஸ்பெக்கிஸ்தான் தூதரகம் தெரிவித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள் சாவுக்கு அவர்கள் குடித்த டானிக் தான் காரணமா? அல்லது வேறு காரணங்களால் குழந்தைகள் இறந்தார்களா? என்பது பற்றி மருத்துவத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.
இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து உஸ்பெக்கிஸ்தானுக்கு உதவ உலக சுகாதார அமைப்பு முன்வந்துள்ளது.