உலகம்
சீனாவில் 'புழு மழை'?- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
- வினோத புழுக்கள் மழை குறித்து சீன அரசாங்கம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் தங்களது கருத்துகளை வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர்.
பீஜிங்:
சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் அண்மையில் பெய்த மழையில் புழுக்களும் சேர்ந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வைரலானது. அந்த வீடியோவில் புழுக்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குடைகளைப் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் செல்கின்றனர். மேலும் சாலையோரம் நிற்கவைக்கப்பட்டுள்ள கார்கள், வாகனங்களில் தண்ணீருடன் புழுக்களும் மிதக்கின்றன. இந்த வினோத புழுக்கள் மழை குறித்து சீன அரசாங்கம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலர் தங்களது கருத்துகளை வேடிக்கையாக பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே சீன பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோ போலியானது. ஏனெனில் பீஜிங்கில் தற்போது மழை பெய்ததாக பதிவாகவில்லை என கூறி உள்ளார்.