கமலா ஹாரிஸ்க்கு ஆதரவளித்த டெய்லர் ஸ்விஃப்ட்.. டென்ஷனில் டிரம்ப் சொன்னது இதுதான்
- கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது.
- கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் விவாதங்களாலும் சூடு பிடித்து வருகிறது. ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக உள்ள கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார்.
நேற்றைய தினம் கமலா- டொனால்டு டிரம்ப் இடையே ABC நியூஸ் ஏற்பாடு செய்த நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் டிரம்புடன் காரசாரமாக எதிர்வாதம் செய்து கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பாப் இசைப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் தான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கப்போவதாகத் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தான் நம்பும் உரிமைகளுக்கு ஆதரவாக கமலா ஹாரிஸ் போராடி வருவதால் அவருக்கு வாக்களிக்கப் போவதாக அவர் பதிவிட்ருந்தார். இதனால் டென்ஷனான உலக பணக்காரருக்கு டிரம்ப் ஆதரவாளருமான எலான் மஸ்க், நான் உங்களுக்கு குழந்தை தருகிறேன், உங்களது பூனையை பார்த்துக்கொள்கிறேன் என்று காட்டமாக தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு அளித்துள்ளது பற்றி டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Fox & Friends என்ற நேர்காணலில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகன் ஒன்றும் இல்லை, அவர் [டெய்லர்] மிகவும் முற்போக்கான ஒருவர், எப்போதும் அவர் ஜனநாயகவாதிகள் பக்கமே நின்றுள்ளார். அதற்கான விலையை அவர் நிச்சயம் செலுத்துவார் என்று துன்று தெரிவித்துள்ளார். மேலும் டெய்லர் ஸ்விஃப்ட் ஐ விட தனக்கு ஆதரவளிக்கும் பிரிட்னி மஹோம்ஸ் ஐ தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரிட்னி மஹோம்ஸ் முன்னாள் கால்பந்து பிரபலமும் டெய்லர் ஸ்விஃப்ட் இன் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது.