உலகம்

கப்பல் மோதியதால் உடைந்து விழுந்த பால்டிமோர் பாலம்

Published On 2024-03-26 08:44 GMT   |   Update On 2024-03-26 08:44 GMT
  • இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
  • தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பெரிய பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோதியது. இதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின

தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை குறித்த முழு விவரம் இன்னும் தெரிய வில்லை.  அங்கு மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.




அமெரிக்காவில் பெரிய பாலம் இடிந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

https://www.instagram.com/reel/C4-IEy-JoWP/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Tags:    

Similar News