உலகம் (World)

குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை நேரில் சந்தித்த மத்திய இணை அமைச்சர்

Published On 2024-06-13 09:24 GMT   |   Update On 2024-06-13 09:24 GMT
  • பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
  • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், குவைத் தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சந்தித்தார்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரவித்தார்.

அதன்படி, இந்திய விமானப்படை விமானம் மூலம், உடல்களை இந்தியா கொண்டுவரப்படுகிறது.

Tags:    

Similar News