'அதிபரானதும் எலான் மஸ்க்கிற்கு இந்த பதவிதான்.. அவரும் ஏத்துக்கிட்டாரு'- ரகசியத்தை உடைத்த டிரம்ப்
- நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப் உரையாற்றினார்
- இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேட்பளராக களம் காண்கிறார். அமரிக்கா மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்கின் அறிவுத்திறன் குறித்து புகழ்ந்து பேசினார். மேலும் மஸ்க் விருப்பப்பட்டால், தான் அதிபர் தேர்தலில் வென்றதும் அவருக்கு மந்திரி பதவியோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியோ வழங்குவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க்கிற்கு அளிக்க உள்ள பதிவை குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். நியூயார்க்கில் உள்ள எக்கனாமிக் கிளப்பில் இதுகுறித்து பேசிய டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானதும், புதிதாக கமிஷன் ஒன்றை அமைத்து பெடரல் அரசாங்கத்தைச் சேர்ந்த அனைவரின் நிதி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து 6 ஏ மாதங்களில் அவற்றில் நடந்துள்ள மோசடிகள் கண்டறியப்படும். 2022-ம் ஆண்டு நடந்த பல மோசடி மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகளால் நேர்மையாக வரி கட்டுபவர்கள் பல நூறு பில்லியன் டாலர்கள் வரியாக செலுத்த நேர்ந்தது.
எனவே நான் பதிவிற்கு வந்ததும் புதிய கமிஷன் அமைத்து அதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமிப்பேன். தலைவர் பதவியை ஏற்க அவரும் [எலான் மஸ்க்கும்] ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். இது நிச்சயம் அவசியமான ஒன்று என்று எலான் மஸ்க்கும் எக்சில் ஆமோதித்துள்ளார்.
முன்னதாக 2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.