உலகம்

உகாண்டாவில் 12 பெண்களை மணந்து குட்டி கிராமத்தையே உருவாக்கிய கல்யாண மன்னன்

Published On 2023-02-02 17:18 GMT   |   Update On 2023-02-02 17:18 GMT
  • பிள்ளைகளில் பெரும்பாலானவர்களின் பெயர்கள்கூட அவருக்கு நினைவில் இல்லை.
  • அடிப்படை தேவைகள் கிடைக்காததால் இரண்டு மனைவிகள் அவரை விட்டுச் சென்றுவிட்டனர்.

திருமணம் செய்து ஒன்றிரண்டு பிள்ளைகளை பெற்று வளர்ப்பதற்கே அல்லாடும் இந்த காலகட்டத்தில், உகாண்டாவைச் சேர்ந்த ஒருவர் 12 திருமணம் செய்துகொண்டு ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார்.

உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா (வயது 68). இவர் ஒன்றல்ல, இரண்டல்ல.. 12 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களின் மூலம் 102 பிள்ளைகள் மற்றும் 578 பேரப்பிள்ளைகள் என ஒரு பெரிய பட்டாளமே உள்ளது. இந்த பிள்ளைகளில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக் கூட மூசாவால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.

உணவு, கல்வி, உடுத்த உடை போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காத அதிருப்தியில், இரண்டு மனைவிகள் மட்டும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். பண்ணை வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக 3 மனைவிகள் அருகில் உள்ள ஊரில் வசிக்கின்றனர். மற்றவர்கள் அவருடன் வாழ்ந்து வருகின்றனர்.

குடும்ப பாரம்பரியத்தை விரிவுபடுத்துவதற்கு பல பெண்களை திருமணம் செய்து, பல குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி அவரது சகோதரர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறி உசுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் அடுத்தடுத்து திருமணம் செய்து பிள்ளைச் செல்வத்தை குவித்த மூசாவுக்கு, இப்போது 'போதும் போதும்' என்றாகிவிட்டது. பிள்ளைகளை அவரால் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மேற்கொண்டு பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை தவிர்த்ததாக கூறுகிறார்.

Tags:    

Similar News