உலகம்
மியான்மரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்
- நேற்று இரவு 11.56 மணிக்கு யான்கூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 3-வது முறையாக காலை 5.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நைபிடா:
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 11.56 மணிக்கு யான்கூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது.
அதன்பின் இன்று அதிகாலை 2.52 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. இது 4.2 ரிக்டர் அளவில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
3-வது முறையாக காலை 5.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 4.5 ரிக்டர் அளவாக பதிவானது. 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
மியான்மரின் யான்கூனில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இரவு முழுவதும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.