உலகம்

மூன்றாம் பாலினத்தவர் மீது வன்மத்தை கக்கும் டிரம்ப்.. திருநங்கைகளுக்கு ராணுவத்தில் மீண்டும் தடை?

Published On 2024-11-26 11:19 GMT   |   Update On 2024-11-26 11:19 GMT
  • 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினா
  • திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பார்

பழமைவாதியான டொனால்டு டிரம்ப் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த அவர், ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கு தடை விதித்தார்.

அவர்களுக்கு எனத் தனியாகக் கவனம் மற்றும் ஏற்படும் செலவு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர் இதை செய்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினார். இப்போது பிரச்சனை என்னவென்றால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

 

அவர்களைக் குறிவைத்து டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆட்சிக் காலத்தை போலவே ராணுவத்தில் திருநங்கைகள் சேர டிரம்ப் தடை விதிக்க உள்ளதாக அவரது அதிகார வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரவைத் தயாரித்து வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கவே ராணுவத்தில் உள்ள 15,000 திருநங்கைகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இதுதவிர்த்து பாலினத்தை உறுதிப்படுத்தும் இதுதவிர்த்து சுகாதாரப் பாதுகாப்பை திருநங்கைகள் அணுகுவதைத் தடை செய்தல், பள்ளியில் திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பது உள்ளிட்ட பிற்போக்கான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும். 

Tags:    

Similar News