உலகம் (World)

கருங்கடலில் 12 பேருடன் சென்ற துருக்கி கப்பல் மாயம்- தேடும் பணி தீவிரம்

Published On 2023-11-20 02:57 GMT   |   Update On 2023-11-20 02:57 GMT
  • கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • மோசமான வானிலை காற்று காரணமாக கப்பலை தேடும் பணியில் தொய்வு.

துருக்கியில் புயலுக்கு மத்தியில் 12 பணியாளர்களுடன் கருங்கடல் கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த துருக்கியின் சரக்குக் கப்பல் மாயமாகியுள்ளது.

இந்த கப்பலை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு துருக்கியின் சோங்குல்டாக் மாகாணத்தில் உள்ள எரெக்லியில் கப்பல் நகர்ந்து கொண்டிருந்ததாக துருக்கி கொடியிடப்பட்ட காஃப்கமெட்லர் கப்பலின் கேப்டன் தெரிவித்ததாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இப்பகுதி நேற்று சக்திவாய்ந்த புயல்களால் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை, காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும். வானிலை சற்று தெளிவான பிறகு மீட்பு நடவடிக்கை தொடங்க குழுக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News