உலகம்

டுவிட்டரில் மேலும் 200 ஊழியர்கள் பணிநீக்கம்

Published On 2023-02-28 02:42 GMT   |   Update On 2023-02-28 02:42 GMT
  • எலான் மஸ்க் டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.
  • எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

வாஷிங்டன் :

உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார் எலான் மஸ்க். அந்த வகையில் முதல் பணியாக டுவிட்டரின் மொத்த ஊழியர்கள் 7,500 பேரில் 4,000-க்கும் மேற்பட்டோரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

மேலும் சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் எலான் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர். அதன் பின்னரும் டுவிட்டர் சிறிய அளவிலான பணி நீக்கங்களை தொடர்ந்து வருகிறது. இதன்காரணமாக டுவிட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர். அதாவது தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை டுவிட்டர் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது.

Tags:    

Similar News