நியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி
- ஒரு கட்டிடத்தை நோக்கி மர்மநபர் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் உயிரிழப்பு
- பிரபலமான ஓட்டல்கள், மால்கள் அந்த பகுதியில் இருந்ததால் பரபரப்பு
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆறு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு முக்கியமான ரெயில்நிலையம் அருகே கட்டுமான வேலை நடந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பிரபலான ஓட்டல்கள், மால்கள் உள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டபடி இன்று தொடங்கும். நாங்கள் பிஃபா உடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்கள் திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய அளவிலான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை'' என்றார்.