உலகம்

உகாண்டா நாட்டின் உயிரியல் பூங்காவில் வெளிநாட்டு பயணிகள் சுட்டுக்கொலை

Published On 2023-10-19 04:34 GMT   |   Update On 2023-10-19 04:34 GMT
  • ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர்.
  • வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கம்பாலா:

ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவின் மேற்கு மாகாணத்தில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பூங்காவில் அதிக அளவிலான வனவிலங்குகளுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

இந்தநிலையில் ராணி எலிசபெத் உயிரியல் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் விலங்குகளை காண சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் அந்த சபாரி வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பின்னர் அந்த வாகனத்தை தீவைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் வெளிநாடு பயணிகள் 2 பேர் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவர்களுடன் சென்ற உள்ளூர் வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அந்த நாட்டின் அதிபர் யோவேரி முசவேனி கண்டனம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News