உலகம்
வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது பிரிட்டன்
- வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.
ரஷியாவின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படை, உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்று ரஷிய ராணுவத்துக்கு உதவியது. இதற்கிடையே ரஷிய அரசுக்கு எதிராக வாக்னர் குழு திடீரென்று கிளர்ச்சியில் ஈடுபட முயன்று பின்னர் அதை கைவிட்டது.
இந்த நிலையில் வாக்னர் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இது போன்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக பிரிட்டன் அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை தொடர்ந்து வாக்னர் குழுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதோடு, இந்த குழுவில் உறுப்பினராக இருப்பது அல்லது ஆதரவளிப்பது சட்டவிரோத செயல் ஆகும்.