உலகம்

மாஸ்கோ மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

Published On 2024-08-21 08:44 GMT   |   Update On 2024-08-21 08:44 GMT
  • ரஷியா எல்லைக்குள் உக்ரைன் படை சென்றதையடுத்து தாக்குதல் அதிகமாகியுள்ளது.
  • ஐந்து பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி ரஷியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளும் டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் எல்லையில் உள்ள ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தனர்.

சுமார் 70-க்கும் அதிகமான குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் அதிரிகரித்து வருகிறது. ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்த தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை உக்ரைன் இதுவரை இல்லாத வகையில் ரஷியாவின் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தபட்சம் 11 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

மொத்தமாக 45 டிரோன்கள் ரஷியாவில் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 11 மாஸ்கோ பிராந்தியத்திற்குள் நுழைந்தபோது அழிக்கப்பட்டது. 23-க்கும் மேற்பட்ட டிரோன்கள் எல்லையில் அமைந்துள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்திலும், 6 டிரோன்கள் பெல்கோரோட் பிராந்தியத்திலும், மூன்று டிரோன்கள் கலுகா பிராந்தியத்திலும், இரண்டு குர்ஸ்க் பிராந்தியத்திலும் சுட்டு வீழ்த்தப்பட்டன என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

சில டிரோன்கள் மாஸ்கோவின் பொடோல்ஸ்க் நகரத்தின் மீது சுட்டு வீழ்த்தப்பட்டது என மோஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு லேயர் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News