உலகம்

உக்ரைன் ரஷியா போர்

ரஷியா தாக்குதல்களில் 70 சதவீதம் ராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் - உக்ரைன் வெளியுறவுத்துறை

Published On 2022-07-15 20:10 GMT   |   Update On 2022-07-15 20:10 GMT
  • ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
  • அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது என உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டினார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

ரஷியாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷியா திணறி வருகிறது.

இந்நிலையில், ரஷியா ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் 70 சதவீதம் ராணுவம் அல்லாத இலக்குகள் மீதுதான் என உக்ரைன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷியா நடத்தி வரும் தாக்குதல்களில் 30 சதவீதம் மட்டுமே ராணுவ இலக்குகளை கொண்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்தே மற்ற 70 சதவீத தாக்குதல்களை நடத்தி வருகிறது.எனவே ரஷியாவை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News