உலகம்

ரஷியா தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உள்பட 7 பேர் பலி

Published On 2023-08-14 05:19 GMT   |   Update On 2023-08-14 08:48 GMT
  • உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினால், ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல்
  • உக்ரைன் டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தியது. தற்போது ரஷியா கெர்சனில் தாக்குதல் நடத்தியுள்ளது

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளையும் தேவையானபோது பயன்படுத்தி வருகிறது.

உக்ரைன் டிரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தபோதிலும், உடனடியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இரு தினங்களுக்கு முன் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனேட்ஸ்க் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதியில் உக்ரைன் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு கெர்சன் பிராந்தியத்தில் ரஷியா கொத்துக்குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்புகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தை, தனது 12 வயது சகோதரர் மற்றும் தந்தையுடன் உயிரிழந்துள்ளது. ஸ்டானிஸ்லேவ் கிராமத்தில் நடைபெற்ற தாக்குதலில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News