உலகம்

உக்ரைன் ரஷியா போர்

உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது - ஐ.நா. தகவல்

Published On 2022-07-19 00:28 GMT   |   Update On 2022-07-19 00:28 GMT
  • உக்ரைன் மீது பிப்ரவரி 24-ம் தேதி அன்று ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியது.
  • இதுவரை 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

கீவ்:

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.

Tags:    

Similar News