உலகம்

செங்கடலை ஒட்டிய ஏமனில் அமெரிக்கா - பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதல்

Published On 2024-06-23 02:42 GMT   |   Update On 2024-06-23 02:42 GMT
  • வடகிழக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் இணைந்து ஏமனின் ஹொடைடா மாகாணத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஹௌதி சார்பில் நடத்தப்படும் அல்-மசிரா டிவி தெரிவித்துள்ளது. செங்கடலை ஒட்டிய அலுஹையா மாவாட்டத்தின் வடகிழக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பான இதர விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

முன்னதாக ஹௌதி சார்பில் அனுப்பப்பட்ட நான்கு டிரோன் கப்பல்கள் மற்றும் இரண்டு டிரோன் விமானங்களை அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் செங்கடல் பகுதியில் செல்வதாக கூறி அவற்றை அழிக்க ஏமனின் வடக்கில் அதிக பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹௌதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

Tags:    

Similar News