உலகம்

அமெரிக்காவில் சுவாரசியம்... அடுத்தடுத்த ஆண்டில் பிறந்த இரட்டை குழந்தைகள்

Published On 2024-01-05 04:53 GMT   |   Update On 2024-01-05 04:53 GMT
  • நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
  • குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதி பில்லி ஹம்ப்ரே-ஈவ். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈவ் பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இரவு 11.48 மணிக்கு அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பின்னர் 40 நிமிட இடைவெளியில் அவருக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்தடுத்த ஆண்டில் இரட்டை குழந்தைகள் பிறந்த சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த குழந்தைகளுக்கு எஸ்ரா, எசேக்கியேல் என அவர்களின் பெற்றோர் பெயர் சூட்டி உள்ளனர்.

இதேபோன்ற சுவாரசியமான சம்பவம் குரேஷியா நாட்டிலும் அரங்கேறி உள்ளது. அங்கு ஒரு பெண்ணுக்கு டிசம்பர் 31-ந்தேதி இரவு 11.59 மணிக்கு ஒரு பெண் குழந்தையும், 2 நிமிடம் கழித்து ஜனவரி 1-ந்தேதி 12.01 மணிக்கு மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News