உலகம்
இந்திய மாணவரை சுட்டுக்கொன்ற அமெரிக்கருக்கு 22 ஆண்டுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றம்
- வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.