உலகம்
3 ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் சுற்றுப்பயணம்
- இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-பிரதமர் ரிஷிசுனக்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்.
- ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்.
வாஷிங்டன்:
நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்.
முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷிசுனக் ஆகியோருடன் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
11 மற்றும் 12-ந்தேதிகளில் லிதுவேனியாவுக்கு செல்லும் ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் பின்லாந்து நாட்டுக்கு செல்லும் அவர் பின்லாந்து-அமெரிக்க நார்டிக் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.