உலகம்

சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்த அமெரிக்க அதிபர்

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு

Published On 2022-07-15 22:28 GMT   |   Update On 2022-07-15 22:28 GMT
  • அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.
  • சவுதி பட்டத்து இளவரசர்முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார்.

ரியாத்:

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முதல் நாடாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்தடைந்தார்.

இந்நிலையில், இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா புறப்பட்டார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு ஜோ பைடன் வந்தடைந்தார். அவருக்கு அரசுமுறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தார். அதிபராக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், முகமது பின் சல்மானை அதிபர் ஜோ பைடன் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News