உலகம் (World)

இந்தியா போறவங்க மணிப்பூர் போகாதீங்க.. அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

Published On 2024-07-25 06:23 GMT   |   Update On 2024-07-25 06:23 GMT
  • அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
  • மணிப்பூரில் வன்முறை அதிகரித்து காணப்படுகிறது.

அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களிடம் இந்தியா பயணம் செய்பவர்கள் மணிப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியான ஜம்மு மற்றும் காஷ்மீரில் நக்சலைட்டுகள் புழக்கம் அதிகளவில் இருப்பதால் அமெரிக்க அரசு இத்தகைய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

"குற்றம் மற்றும் தீவிரவாதம் அதிகரித்து காணப்படுவதால் இந்தியா செல்வோர் அதிக கவனமுடன் செயல்பட வேண்டும். சில பகுதிகளில் அதிகளவு அபாயம் கொண்டுள்ளது."

"இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பயணம் செய்யாதீர்கள். அங்கு தீவிரவாதம் மற்றும் பொது அமைதி கேள்விக்குறியாகி இருக்கிறது. மத்திய மற்றும் கிழக்கு இந்திய பகுதியான மணிப்பூரிலும் வன்முறை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது."

"இந்தியாவில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களில் கற்பழிப்பு முதன்மையாக உருவெடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது."

"சுற்றுலா தலங்கள், போக்குவரத்து முனையங்கள், சந்தை, அரசு சேவை வழங்கும் பகுதிகளை குறிவைத்து சுற்றுலாவாசிகள் மீது கயவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்," என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News