உலகம்

போராட்டம் ஓய்ந்தது: வங்காளதேசத்தில் மீண்டும் இணைய தள சேவை

Published On 2024-07-30 06:46 GMT   |   Update On 2024-07-30 06:48 GMT
  • மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

 இதையடுத்து வங்காளதேசத்தில் இணைய தள சேவை முடக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டத்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனால் வன்முறை ஓய்ந்தது.

இந்த நிலையில் வங்காளதேசத்தில் இணைய தள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இணைய தளம் மற்றும் மொபைல் இணைய இணைப்பு தற்போது முழு செயல்பாட்டுடன் மீட்டமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

Tags:    

Similar News