உண்மைக் காதல்.. 10 வருட போராட்டம் - கணவனை கோமாவில் இருந்து மீட்ட மனைவி
- தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
- இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்த கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் ஹாங்சியா தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த போதிலும், மனைவி ஹாங்சியா தனது கணவரை அன்புடன் பாசமாக கவனித்து வந்துள்ளார். கணவரை பராமரித்துக் கொள்வதில் ஹாங்சியாவின் இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.
கோமாவில் இருந்து மீண்ட கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அவருக்கு கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஹாங்சியா இன்ப அதிர்ச்சியில் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹாங்சியா, "தற்போது நான் சோர்வாக இருக்கும் போதிலும், குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லாமே சரியாகிவிடும். கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கணவரை தொடர்ந்து பார்த்துக் கொள்ள என் குழந்தைகள் ஆதரவாக இருந்தனர்," என்று தெரிவித்தார்.