உலகம்

டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம்: ரஷியா

Published On 2024-11-07 01:20 GMT   |   Update On 2024-11-07 01:20 GMT
  • நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம்- டிரம்ப்.
  • உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்ப்பு.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் நிர்வாகம் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

தற்போது உக்ரைன்- ரஷியா இடையேயும், இஸ்ரேல்- காசா, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயும் சண்டை நடைபெற்று வருகிறது. நேற்றைய வெற்றி உரையில் நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை. சண்டையை நிறுத்த போகிறோம் எனத் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம். ஆனால் எங்களுடைய நிலைமைகள் (conditions) மாற்றப்படவில்லை. ரஷியா தங்கள் நாட்டின் நலனில் உறுதியாக நிலைத்துகிறது. உக்ரைன் மோதலில் தங்களுடைய இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உக்ரைனுக்கு எதிராக போர் தொடரும் என்பதை ரஷியா மறைமுகமாக தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்க மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. டொனால்டு டிரம்ப் அதிபர் ஆனதும் இது தொடருமா? என்பது வைத்துதான் உக்ரைன்- ரஷியா போர் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

Tags:    

Similar News