உலகம்

தைவான் சென்ற நான்சி பெலோசி

அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் விமானம்

Published On 2022-08-03 00:41 GMT   |   Update On 2022-08-03 00:41 GMT
  • சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றார்.
  • இதனால் தைவான் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்:

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்.

25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசி ஆவார். பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலகிலேயே அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற பெருமையை அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பயணம் செய்த விமானம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக, சர்வதேச விமான கண்காணிப்பு சேவை நிறுவனமான பிளைட் ரேடார் 24ன் தகவல் தொடர்பு இயக்குனர் இயன் பெட்செனிக் கூறியதாவது:

அமெரிக்காவில் இருந்து சபாநாயகர் பெலோசி பயணித்த போயிங் ட் ஸ்பெர் 19 விமானம் புறப்பட்டது முதலே மக்களின் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. செவ்வாயன்று விமானம் புறப்பட்டது முதல் எங்கள் சேவையில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம் இதுவாகும். பின்னர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கடந்த போது, எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமான கண்காணிக்கப்பட்ட விமானம் ஆனது. தைவானின் தைபேயில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு வரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News