உலகம்

பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் இன்று தொலைபேசியில் உரையாடல்

Published On 2022-12-26 15:30 GMT   |   Update On 2022-12-26 15:30 GMT
  • ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
  • அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச், அக்டோபரில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

உக்ரைனில் அமைதி நிலவ உதவவேண்டும். ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி.

ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

ஏற்கனவே அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச் மற்றும் அக்டோபரில் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News